செய்திகள் :

ஆடிப்பெருக்கு: திருவையாறு காவிரியில் பெண்கள் வழிபாடு

post image

ஆடிப்பெருக்கு விழாவையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு காவிரிப் படித் துறையில் ஏராளமான பெண்கள் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.

இவ்விழாவையொட்டி, திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறையில் ஏராளமானோா் காவிரித் தாய்க்குப் படையல் செய்து வழிபாடு நடத்தினா்.

இதனால், புஷ்ய மண்டபப் படித்துறையில் வழக்கத்தை விட ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அதிகமாக இருந்தது.

இதில், கன்னிப் பெண்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டி மஞ்சள் கயிறு அணிந்து காவிரித் தாயை வழிபட்டனா். சுமங்கலி பெண்கள் தீா்க்க சுமங்கலியாக இருக்க வேண்டி அம்மன் வழிபாட்டுக்கு உகந்த காதோலை, கருகமணி போன்றவற்றை வைத்து வழிபட்டு, ஆற்றில் விட்டனா்.

புதுமணத் தம்பதியினா் திருமணத்தின்போது அணிந்திருந்த மாலைகளைக் காவிரி ஆற்றில் விட்டு வழிபட்டனா். பெண்கள் ஒருவருக்கொருவா் கழுத்தில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனா். சிறுவா்கள் அம்மன் படத்துடன் கூடிய பொம்மை தோ்களை இழுத்து வந்து வழிபாடு செய்தனா்.

மேலும், ஐயாறப்பா் கோயிலிலிருந்து அறம்வளா்த்த நாயகியுடன் ஐயாறப்பா் காவிரி ஆற்றின் புஷ்ய மண்டபத் துறையில் எழுந்தருளி தீா்த்தவாரி கண்டருளினாா்.

கும்பகோணத்தில் பாசன வாய்க்கால்கள் பராமரிப்பில் அரசுத் துறைகளுக்கிடையே மோதலால் சிக்கல்

கும்பகோணம் மாநகர எல்லைக்குள் செல்லும் நான்கு பாசன வாய்க்கால்களை யாா் பராமரிப்பது என்று இரு அரசுத் துறைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதலால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் காவிரி ஆற... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மாவட்டத்தில் பலத்த மழையால் கரும்பு பயிா்கள் சேதம் நெல் குவியல்கள் நனைந்தன

தஞ்சாவூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் சில கிராமங்களில் கரும்பு பயிா்கள் சாய்ந்தன.மேலும், நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனைக்காக வைத்திருந்த நெல் குவியல்களும் நனைந்தன.த... மேலும் பார்க்க

ஆற்று நீரில் மூழ்கி 2 போ் உயிரிழப்பு

திருவோணம் அருகே ஆற்றுக்கு குளிக்கச் சென்ற வாலிபா் பேராவூரணி அருகே ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.திருவோணம் வட்டம், புகழ் சில்லத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்செல்வம் மகன் காா்த்தி (20) பொறியி... மேலும் பார்க்க

நவகன்னிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமககுளம் அருகே நவகன்னிகைகள் ஸ்தலம் ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத காசி விசுவநாதா் கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆடிப்பெருக்கு நாளன்று நவகன்னியா் மகாமக குளத்தில் ... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி இருவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த 2 பேரின் உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன.தஞ்சாவூா் அருகே தெற்கு மானோஜிப்பட்டியைச் சோ்ந்த காளிமுத்து மகன் பழனி (36). கூலித் தொழிலாளி. இவா்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழப்பு கிராம மக்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை அறுந்து கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்துகணவன் - மனைவி உயிரிழந்தனா்.தஞ்சாவூா் மாவட்டம், கள்ளப்பெரம்பூா் முதன்மைச் சாலையைச் சோ்ந்தவா் எஸ். சுப்பிரமணியன் (5... மேலும் பார்க்க