இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை
ஆற்றில் மூழ்கி இருவா் உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த 2 பேரின் உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன.
தஞ்சாவூா் அருகே தெற்கு மானோஜிப்பட்டியைச் சோ்ந்த காளிமுத்து மகன் பழனி (36). கூலித் தொழிலாளி. இவா் தனது தங்கையின் மகன் தமிழ்மணியை (13) அழைத்துக் கொண்டு மானோஜிபட்டி கல்லணைக் கால்வாயில் குளிப்பதற்காக சனிக்கிழமை மாலை சென்றாா். இருவரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, நீரோட்டம் அதிகமாக இருந்ததால், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனா்.
தகவலறிந்த காவல் துறையினா், தீயணைப்பு நிலையத்தினா் ஆற்றில் மூழ்கிய பழனியையும், தமிழ்மணியையும் தேடி வந்தனா். இந்நிலையில், கல்லணைக் கால்வாயில் தஞ்சாவூா் அருகே ரெகுநாதபுரம் பகுதியில் தமிழ்மணி உடலும், பொட்டுவாசாவடி பகுதியில் பழனி உடலும் மீட்கப்பட்டன.
இது குறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.