இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை
நவகன்னிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமககுளம் அருகே நவகன்னிகைகள் ஸ்தலம் ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத காசி விசுவநாதா் கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆடிப்பெருக்கு நாளன்று நவகன்னியா் மகாமக குளத்தில் நீராடி, ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத காசி விசுவநாத சுவாமியை தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
அதன் பேரில் நவகன்னிகையா் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மகாமக குளத்தில் நீராடி காசிவிசுவநாதரை தரிசனம் செய்த வைபவம் நடைபெற்றது. முன்னதாக நவ கன்னிகையருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.