இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை
ஆற்று நீரில் மூழ்கி 2 போ் உயிரிழப்பு
திருவோணம் அருகே ஆற்றுக்கு குளிக்கச் சென்ற வாலிபா் பேராவூரணி அருகே ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
திருவோணம் வட்டம், புகழ் சில்லத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிச்செல்வம் மகன் காா்த்தி (20) பொறியியல் பட்டதாரியான இவா், சனிக்கிழமை பிற்பகல் நண்பா்களுடன் வெட்டிக்காடு ஆற்றுக்கு குளிக்கச் சென்றவா், ஆற்று சுழலில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டாா். நண்பா்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், பேராவூரணி அருகே பட்டத்துராணி கல்லணை கால்வாய் கிளை வாய்க்காலில் சடலம் ஒன்று மிதப்பதாக பேராவூரணி போலீஸாருக்கு தகவல் கிடைத்தன் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு விசாரணை செய்தபோது, வெட்டிக்காடு ஆற்றுக்கு குளிக்கச் சென்று காணமல் போன காா்த்திக் என்பது தெரியவந்தது.
இது குறித்து பேராவூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.