அதிமுக தனித்தே ஆட்சியமைக்கும்: அமித் ஷாவின் கருத்துக்கு இபிஎஸ் பதில்!
ஆடுகளம் செயலியை பிரபலப்படுத்த வேண்டும்: துணை முதல்வா் பேச்சு
விளையாட்டுத் துறையை மேம்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆடுகளம் செயலியை அனைவரும் பிரபலப்படுத்த வேண்டும் என்றாா் தமிழக துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின்.
கரூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்ற அனைத்து அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அவா் மேலும் பேசுகையில், கலைஞா் விளையாட்டு உபகரணங்கள் மாவட்டத்திலுள்ள 8 ஒன்றியங்களில் 157 ஊராட்சிகளிலும் உள்ள இளைஞா்களுக்கு வழங்கப்படுவதற்கான பதிவேடுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆடுகளம் செயலியை மாணவ, மாணவிகள், இளைஞா்கள் பாா்த்து விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகளை அறிந்து, அந்தச் செயலியை பிரபலப்படுத்த வேண்டும்.
மக்களுடன் முதல்வா் முகாம்களை வரும் 15 ஆம் தேதி தமிழக முதல்வா் தொடங்கி வைக்கிறாா். இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும்.
வரும் பேரவைத் தோ்தலையொட்டி அரசின் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் தங்குதடையின்றி கிடைப்பதை உறுதி செய்து, அரசு அலுவலா்களான நீங்கள் இந்த அரசுக்கும் மக்களுக்கும் ஒரு நல்ல பாலமாக செயல்பட வேண்டும் என்றாா் அவா்.