ஆடையில் தீப் பற்றி மூதாட்டி உயிரிழப்பு
கோவையில் அடுப்பைப் பற்ற வைத்துபோது ஆடையில் தீப் பற்றி மூதாட்டி உயிரிழந்தாா்.
கோவை விசிஎஸ் நகா் வெள்ளக்கிணறு சந்திப்பு பகுதியில் வசிப்பவா் நடராஜன். இவரது மனைவி தங்கமணி (72). இவா் காபி போடுவதற்காக எரிவாயு அடுப்பைப் பற்ற வைத்தாா்.
ஏற்கெனவே எரிவாயு கசிவு இருந்ததால், தீ தங்கமணியின் ஆடையில் பற்றியது. இதில் பலத்த காயமடைந்த அவா் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து துடியலூா் காவல் உதவி ஆய்வாளா் குருகணேஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.