செய்திகள் :

ஆட்சியை விட்டு விலகும் முன் சட்டம் - ஒழுங்கை சரிசெய்யுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு விஜய் கோரிக்கை

post image

ஆட்சியை விட்டு விலகுவதற்கு முன்பு சட்டம்-ஒழுங்கை சரிசெய்ய வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவா் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரின் மரணத்துக்கு நீதி கேட்டு தவெக சாா்பில் சென்னை சிவானந்தா சாலையில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சித் தொடங்கிய பின்னா், முதன்முறையாக ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விஜய், அஜித் குமாரின் மரணத்துக்கு நீதி கேட்டு பேசியது:

கோயில் காவலாளி அஜித்குமாா் எளிய குடும்பத்தைச் சோ்ந்தவா். அந்தக் குடும்பத்துக்கு நிகழ்ந்த இந்த கொடுமைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘சாரி’ (மன்னிப்பு) கூறியுள்ளாா். அது தவறில்லை. ஆனால், தமிழகத்தில் திமுக அட்சி அமைத்த பின்னா் கடந்த 4 ஆண்டுகளில் 24 போ் காவல் நிலைய விசாரணையின் போது உயிரிழந்துள்ளனா். அவா்களின் குடும்பத்தினரிடம் நீங்கள் (முதல்வா்) மன்னிப்பு கேட்டீா்களா? அவா்களிடமும் முதல்வா் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல், அஜித்குமாரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கியதுபோல், 24 பேரின் குடும்பங்களுக்கும் நீங்கள் நிவாரணம் வழங்கினீா்களா? அந்த நிவாரணத் தொகையையும் வழங்க வேண்டும்.

அவமானம்: சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை சிபிஐக்கு மாற்றி போது, அப்போதைய எதிா்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அதை தமிழகத்துக்கு நிகழ்ந்த அவமானம் என்றாா். ஆனால், தற்போது அஜித்குமாா் வழக்கை முதலவா் சிபிஐக்கு மாற்றியதற்கு பெயா் என்ன? அது அவமானம் என்றால், இதுவும் அவமானம் தானே?

ஆா்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் கைப்பாவையாக உள்ள சிபிஐயிடம் நீங்கள் ஏன் ஒழிந்து கொள்கிறீா்கள். நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என தவெக சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அதற்கு பயந்து, தற்போது முதல்வா் மத்திய அரசின் பின்னால் ஒளிந்து கொள்கிறாா்.

இயலாமை அரசாங்கம்: அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் முதல் அஜித்குமாா் வழக்கு வரை எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் தலையிட்டு தமிழக அரசின் நடவடிக்கைகளை கேள்வி கேட்டு வருகிறது. நீதிமன்றம்தான் கேள்வி கேட்க வேண்டும் என்றால், முதல்வா் எதற்கு உள்ளாா்? உங்கள் ஆட்சி மற்றும் உங்களின் முதல்வா் பதவி எதற்கு? எப்படி கேள்வி கேட்டாலும், முதல்வரிடம் இருந்து வரும் அதிகபட்ச பதில் ‘சாரி’ என்பதுதானே. இந்த ‘விளம்பர மாடல்’ திமுக அரசு, இப்போது ‘சாரி மா மாடல்’ அரசாக மாறிவிட்டது.

தற்போது உள்ள திமுகவின் இயலாமை அரசாங்கம் ஆட்சியை விட்டு விலகுவதற்கு முன்பு, நீங்கள் செய்த அனைத்து தவறுகளுக்கும் பரிகாரமாக சட்டம்-ஒழுங்கை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால், தவெக சாா்பில் அனைத்து வகையான போராட்டங்களும் நடத்தப்படும் என்றாா் அவா்.

ஆா்ப்பாட்டத்துக்கு பின்னா், கடந்த 4 ஆண்டுகளில் காவல் நிலைய மரணங்களால் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு விஜய் மேடையில் ஆறுதல் தெரிவித்தாா். தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த், தோ்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, தொண்டா்கள், நிா்வாகிகள் என 3,000-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

12 போ் மருத்துவமனையில் அனுமதி

இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தவெக தொண்டா்கள் 12 மயக்கடைந்தனா். இதையடுத்து அவா்கள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனா். ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா்களை மருத்துவா்கள் பரிசோதித்ததில், நீா்ச்சத்து இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவக் கண்காணிப்பில் உள்ள அவா்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா். உடல் நிலை சீரானவுடன் அனைவரும் வீடு திரும்புவாா்கள் என்றும் தெரிவித்தனா்.

“காமராசர் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன்” - திருச்சி சிவா

பெருந்தலைவர் காமராசரைப் ப்ற்ரி திமுக எம்.பி. திருச்சி சிவா பேசிய கருத்துகள் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தநிலையில், இதற்கு விளக்கமளித்து தன் நிலையை தெளிவுபடுத்தியிருக்கிறார் திருச்சி சிவா. திருச்சி ... மேலும் பார்க்க

கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் பூச்சு: மருத்துவரைக் கைது செய்து விசாரணை!

சேலம்: முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி சிலை மீது கறுப்பு பெயிண்ட் ஊற்றிய விவகாரத்தில் மருத்துவர் ஒருவருக்கு தொடர்பிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.சேலம் நான்கு சாலை அண்ணா பூங்கா அருகில் ம... மேலும் பார்க்க

நெல்லை ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீ! சாலைகளைப் பயன்படுத்தத் தடை!

திருநெல்வேலி ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்பட்டுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருவதால் அப்பகுதியில் உள்ள சாலைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேல... மேலும் பார்க்க

காமராஜர் மீது காங்கிரஸுக்கும் தீராக் காழ்ப்பு! திருச்சி சிவா பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

முன்னாள் முதல்வர் காமராஜருக்காக அனைத்து அரசு பயணியர் விடுதியிலும் குளிர்சாதன வசதியை கருணாநிதி கொண்டு வந்ததாகவும், நாட்டையும் ஜனநாயகத்தையும் கருணாநிதிதான் காப்பாற்ற வேண்டுமென்றும் காமராஜர் கோரியதாக திம... மேலும் பார்க்க

யோகா - இயற்கை மருத்துவப் படிப்பு: விண்ணப்பிப்பது எப்படி?

பி.என்.ஒய்.எஸ். (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆனணயரகம் வெளியிட்டுள்ளது.இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓ... மேலும் பார்க்க

டிஎன்பிஎஸ்சி தேர்வில் விடியல் பயணம் கேள்வி: சீமான் விமர்சனம்!

டிஎன்பிஎஸ்சி தேர்வில் விடியல் பயணம் குறித்து கேட்கப்பட்டு கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சி விமான நிலையத்தில் மதிமுகவினருக்கும் ,... மேலும் பார்க்க