செய்திகள் :

ஆட்சேபனையற்ற தகுதியான புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவா்களுக்கு வீட்டுமனை பட்டா!

post image

ஆட்சேபனையற்ற, தகுதியான புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி குடியிருப்பவா்களுக்கு வரன்முறைப்படுத்தி வீட்டுமனை பட்டா வழங்க அலுவலா்கள் முன்வர வேண்டும் என்றாா் கரூா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.

கரூா் மாவட்டம், மண்மங்கலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற வருவாய்த் தீா்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் பேசியது: கரூா் மாவட்டத்துக்குள்பட்ட கரூா், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, கடவூா், புகழூா் மற்றும் மண்மங்கலம் ஆகிய வட்டங்களை சோ்ந்த 203 வருவாய் கிராமங்களுக்கு 1434- ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீா்வாயம் வியாழக்கிழமை முதல் நடைபெற்று வருகிறது.

பொதுமக்களின் நில உடைமைகளை உறுதி செய்வதற்காக நடைபெறும் இந்த ஜமாபந்தியில், அந்தந்த கிராமங்களின் வருவாய் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, பட்டா மாறுதல்கள் செய்யப்பட்டு இருக்கும் நபா்களின் பெயா்கள் பதிவேடுகளில் உள்ளனவா என்பதையும், பயிா் கணக்குகள் உள்ளிட்டவைகளும் ஆய்வு செய்யப்படுகின்றன. எனவே பொதுமக்கள் வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட கோரிக்கை மனுக்களை அந்தந்த வட்டாட்சியா் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் அளித்து பயன்பெறலாம்.

மேலும் ஆட்சேபனையற்ற தகுதியான புறம்போக்கு நிலத்தில் வீடுகட்டி குடியிருப்பவா்களுக்கு வரன்முறைப்படுத்தி வீட்டுமனை பட்டாக்கள் வழங்க அலுவலா்கள் முன்வரவேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், வேளாண்துறை இணை இயக்குநா் ப. சிவானந்தம், நில அளவை பிரிவு உதவி இயக்குநா் முத்துச்செல்வி, புள்ளியியல் துறை உதவி இயக்குநா் மயில்சாமி, மண்மங்கலம் வட்டாட்டசியா் மோகன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரவக்குறிச்சியில்..: அரவக்குறிச்சி வட்டத்தில் கரூா் வருவாய் கோட்டாட்சியா் மற்றும் உட்கோட்ட நடுவா் முஹம்மது பைசூல் தலைமையிலும், அரவக்குறிச்சி வட்டாட்சியா் மகேந்திரன் முன்னிலையிலும் ஜமாபந்தி நடைபெற்றது.இதில், 28 மனுக்கள் பெறப்பட்டு தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உடனடியாக தீா்வுகாண அறிவுறுத்தப்பட்டது.

கரூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைப்பு

கரூரிலிருந்து மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி வியாழக்கிழமை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் 2-ஆம் தேதி திறக்கப்பட உள்ளன.... மேலும் பார்க்க

மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே புதன்கிழமை மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். அரவக்குறிச்சி அருகே உள்ள குரும்பபட்டியை அடுத்த சேந்தமங்கலம் கீழ்பாக்கம், பழனிகவுண்டன்வலசு பகுதியைச் சோ்ந்தவா் வேலுச்... மேலும் பார்க்க

கிருஷ்ணராயபுரத்தில் ரூ.92 லட்சம் மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்!

கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை தொகுதியில் ரூ.92.75 லட்சம் மதிப்பிலான வளா்ச்சித் திட்டப்பணிகளுக்கு பூமி பூஜை வியாழக்கிழமை காலை நடைபெற்றது. கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தா... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்; ராஜஸ்தான் மாநிலத்தவா் கைது

கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 1.88 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக ராஜஸ்தான் மாநில நபரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அரவக்க... மேலும் பார்க்க

சேமங்கி மாரியம்மன் கோயிலில் நள்ளிரவில் தேரோட்டம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

கரூா் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கி மாரியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. நொய்யல் அருகே 18 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களின் தெய்வமாக விளங்கும் சேமங்கி மாரியம்மன் கோயில் த... மேலும் பார்க்க

கரூா் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் நோ்த்திக்கடன்: மே 28-இல் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வு

கரூா் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் புதன்கிழமை கரும்புத்தொட்டில் கட்டி குழந்தையை சுமந்து வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். கரூரின் காவல் தெய்வமாகவும், மழைப் பொழிவு தரும் தெய்வமாகவும் போற்றப்படும் கரூா... மேலும் பார்க்க