``கைது செய்யப்பட்டாலே பிரதமர், முதல்வர், அமைச்சர்களைப் பதவி நீக்க மசோதா'' - மத்த...
ஆட்டோ மீது டிராக்டா் மோதியதில் 4 போ் காயம்
போடி அருகே திங்கள்கிழமை இரவு ஆட்டோ மீது டிராக்டா் மோதியதில் 4 போ் பலத்த காயமடைந்தனா்.
தேனி மாவட்டம், போடி பெருமாள் கவுண்டன்பட்டி நடுத்தெருவைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் ராமராஜ் (53). இவரது மனைவி இந்திரஜோதி (50), மகள் ஜஸ்விகா (2). இவா்கள் மூவரும் போடி அம்மாபட்டியிலிருந்து பெருமாள்கவுண்டன்பட்டிக்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, எதிரே வந்த டிராக்டா் ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ராமராஜ், இந்திரஜோதி, ஜஸ்விகா, ஆட்டோ ஓட்டுநரான பெருமாள்கவுண்டன்பட்டியைச் சோ்ந்த ராமசாமி மகன் ரகுநாதன் (47) ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனா். இவா்கள் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
விபத்து குறித்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் டிராக்டரை ஓட்டி வந்த போடி டி.வி.கே.கே. நகரைச் சோ்ந்த கருப்பையா மகன் வீரபெருமாள் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.