`30 நாள்கள் சிறையில் இருந்தால் பதவி பறிப்பு' -அமித்ஷா மசோதா தாக்கல்; எதிர்க்கட்ச...
ஆண்டின் சிறந்த வீரர் விருது... அதிகமுறை வென்று முகமது சாலா சாதனை!
லிவர்பூல் கால்பந்து வீரர் முகமது சாலா மூன்றாவது முறையாக பிஎஃப்ஏ ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.
எகிப்திய நாட்டைச் சேர்ந்த முகமது சாலா (33) இங்கிலாந்தின் பிரீமியர் லீக்கில் லிவர்பூல் அணிக்காக விளையாடி வருகிறார்.
எகிப்திய அரசன்
கடந்த சீசனில் முகமது சாலா 29 கோல்கள், 18 அசிஸ்ட்டுகளைச் செய்து அசத்தினார். இதன்மூலம், பிரீமியர் லீக்கில் அதிகமுறை (20 முறை) சாம்பியனான அணியாக லிவர்பூல் எஃப்சி மான்செஸ்டர் யுனைடெட் உடன் சமன் செய்தது.
பேலந்தோர் விருதுக்கான பட்டியலிலும் முகமது சாலா இடம் பிடித்துள்ளார்.
கால்பந்து ரசிகர்கள் இவரை செல்லமாக ’எகிப்திய அரசன்’ என அழைக்கிறார்கள்.
இந்நிலையில், பிஎஃப்ஏ ஆண்டின் சிறந்த வீரர் விருதை சாலா மூன்றாவது முறையாக வென்று அசத்தியுள்ளார்.
லிவர்பூல் லெஜெண்ட்
இதற்கு முன்பாக பல வீரர்கள் இந்த விருதை இரண்டு முறை வாங்கியுள்ளார்கள். ஆனால், சாலா முதல்முறையாக 3 முறை வாங்கி சாதனை படைத்துள்ளார்.
சமீபத்தில் பாலஸ்தீன பீலே மறைவுக்கு யுஇஎஃப்ஏ-வை கண்டித்து இவர் பதிவிட்டதன் எதிரொலியாக அடுத்த போட்டியில் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என பதாகையை வைத்தது குறிப்பிடத்தக்கது.
முகமது சாலா மொத்தமாக 657 போட்டிகளில் 323 கோல்கள் அடித்துள்ள இவர் லிவர்பூல் அணிக்காக மட்டுமே 246 கோல்கள் அடித்திருப்பது கவனிக்கத்தக்கது.