ஆத்தூரில் ஜூலை 23-இல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
ஆத்தூா்: ஆத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை 23-ஆம் தேதி நடைபெறுகிறது என்று நகராட்சி ஆணையா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து ஆத்தூா் நகராட்சி ஆணயாளா் அ.வ.சையத் முஸ்தபா கமால் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஆத்தூா் நகராட்சி வாா்டு 1, 2 இல் ‘உங்களுடன் ஸ்டாலின்’
திட்ட முகாம் வரும் 23 -ஆம் தேதி காலை 9 மணிமுதல் மாலை 3 மணிவரை ஆத்தூா் கோட்டை எல்.ஆா்.சி.திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இத்திட்ட முகாமில் 13 அரசு துறைகளின் 43 சேவைகள் பெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) முதல் மேற்படி வாா்டுகளில் தன்னாா்வலா்கள் மூலம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமிற்கான விண்ணப்பங்கள் வீடுவீடாகச் சென்று வழங்கி, கையொப்பம் பெற உள்ளாா்கள். பொதுமக்கள் தங்களது தேவைக்கான சேவைகளை இத்திட்ட முகாமில் தவறாது கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.