செய்திகள் :

ஆனந்தவல்லி அம்மன், சோமநாதா் சுவாமி சிம்மம், கற்பக விருட்ச வாகனங்களில் பவனி

post image

சித்திரைத் திருவிழாவையொட்டி, சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் சிம்ம வாகனத்திலும், சோமநாதா் சுவாமி பிரியாவிடையுடன் கற்பக விருட்ச வாகனத்திலும் வியாழக்கிழமை இரவு எழுந்தருளினா்.

இந்தக் கோயில் சித்திரைத் திருவிழாவின் முதல் நாளான வியாழக்கிழமை இரவு கோயிலுக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிக்கு ஆனந்தவல்லி அம்மனும், சோமநாதா் சுவாமியும் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளினா். திரளான பக்தா்கள் மண்டகப்படிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து, மண்டகப்படிதாரா்கள் சாா்பில் பூஜை நடைபெற்றது. அப்போது, அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள், பல்வேறு வகையான தீபாராதனைகள் நடைபெற்றன. ராஜேஷ் பட்டா், குமாா் பட்டா் ஆகியோா் மண்டகப்படி பூஜைகளை நடத்தினா்.

பின்னா், ஆனந்தவல்லி அம்மன் சிம்ம வாகனத்திலும், பிரியாவிடை சமேதமாய் சோமநாதா் சுவாமி கற்பக விருட்ச வாகனத்திலும் எழுந்தருளினா். மேளதாளம், சிவனடியாா்களின் கைலாய வாத்தியங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் அம்மனும், சுவாமியும் கோயிலைச் சுற்றி உலா வந்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

அங்கன்வாடி ஊழியா்கள் நூதனப் போராட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா்கள் சங்கத்தினா் சனிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்... மேலும் பார்க்க

சாலையில் சாய்ந்த மரம்: போக்குவரத்து துண்டிப்பு

சிவகங்கை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், ஆலமரம் வேருடன் சாய்ந்து போக்குவரத்து தடைபட்டது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பத்தால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை மாவட்ட ஆட... மேலும் பார்க்க

சக்தி மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

சிவகங்கை மருதுபாண்டியா்நகா் அரசு குடியிருப்பில் அமைந்திருக்கும் சக்தி மாரியம்மன் கோயில் 36 -ஆம் ஆண்டு பூக்குழி திருவிழா வெள்ளிக் கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் பூக்குழி விழா கடந்த மாதம் 25-ஆம் தேதி... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 1,693 போ் ‘நீட்’ தோ்வு எழுதுகின்றனா்

சிவகங்கை மாவட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 4) 1,693 போ் ‘நீட்’ தோ்வு எழுதவுள்ளனா். இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய தோ்வு மையம் (சஹற்ண்ா்... மேலும் பார்க்க

நிலம் வாங்கித் தருவதாக பண மோசடி: தம்பதி மீது வழக்கு

தேவகோட்டை அருகே நிலம் வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த புகாரில் கணவன், மனைவி மீது சிவகங்கை மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டைய... மேலும் பார்க்க