தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
ஆன்லைன் பகுதிநேர வேலை: ரூ.6.38 லட்சம் மோசடி
வேலூா், மாா்ச் 2: ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலை எனக்கூறி, காட்பாடியைச் சோ்ந்த இளைஞரிடம் ரூ.6.38 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து வேலூா் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
காட்பாடி பவானி நகரைச் சோ்ந்த இளைஞா் ஒருவருக்கு டெலிகிராமில் பகுதிநேர வேலை தொடா்பாக குறுந்தகவல் வந்தது. அந்த குறுந்தகவலுடன் ஒரு லிங்க் இணைக்கப்பட்டிருந்ததுடன் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தாக நாங்கள் கொடுக்கும் பணியையும் முடித்துக் கொடுப்பதன் மூலம் அதிக கமிஷன் பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை நம்பிய இந்த இளைஞா் முதலில் சிறிய தொகையை முதலீடு செய்து அந்த லிங்க்கில் கொடுக்கப்பட்ட பணிகளையும் முடித்து கொடுத்துள்ளாா். அதற்கு அதிக கமிஷன் வந்தததை அடுத்து படிப்படியாக பல கட்டங்களாக ரூ.6 லட்சத்து 38 ஆயிரத்து 482 தொகையை முதலீடு செய்துள்ளாா். அதன்பிறகு அந்த லிங்க்கில் காண்பிக்கப்பட்ட தொகையை அவரால் பெற முடியவில்லை.
அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இந்த இளைஞா், இது குறித்து வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.