செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூரில் 300 கி.மீ. தொலைவிலிருந்து பாக். போர்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது! -விமானப்படை தளபதி

post image

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது 6 பாகிஸ்தான் போர்விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று விமானப்படை தலைமை தளபதி மார்ஷல் ஏ. பி. சிங் சனிக்கிழமை(ஆக. 9) தெரிவித்தார். அவற்றுள் பாகிஸ்தான் விமானப்படையின் 5 போர் ஜெட்களும் ஒரு பெரும் போர்விமானமும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் நடைபெற்ற விமானப்படை சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர்: “பாகிஸ்தானில் குறைந்தபட்சம் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதிலும் குறிப்பாக, 300 கி.மீ. தொலைவிலிருந்து பாகிஸ்தானின் மின்னணு உளவு விமானம் ஒன்றும் தாக்கப்பட்டது.

நிலப்பரப்புக்கும் வான் வெளிக்குமிடையில் இத்தனை தூரத்திலிருக்கும் இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழிப்பதில் இந்திய விமானப்படையின் இந்த நடவடிக்கை மிகப்பெரியதொன்றாகவே பார்க்கப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

Chief of Air Staff Marshal A.P. Singh on Saturday (August 9, 2025) said that the Indian Air Force (IAF) took down six Pakistan Air Force aircraft

“காஸாவில் எப்போது சண்டையை நிறுத்துவீர்கள்?” -இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்!

காஸாவில் உடனடியாக சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் வீதிகளில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.காஸா சிட்டி முழுவதையும் படை பலத... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் பாகிஸ்தானுக்கு இரண்டே மாதங்களில் ரூ.123 கோடி இழப்பு!

இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளால் பாகிஸ்தானுக்கு இரண்டே மாதங்களில் ரூ.123 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.பாகிஸ்தான் விமானநிலையங்கள் நிர்வாகம் (பிஏஏ) ரூ. 123 கோடி இழப்பை சந்தித்துள்ளது. இதற்கான மு... மேலும் பார்க்க

பாலஸ்தீன பீலே கொலை..! யுஇஎஃப்ஏவை விமர்சித்த சாலா!

பாலஸ்தீன பீலே எனப்படும் கால்பந்து வீரர் சுலைமான் அல்-ஒபெய்டு இஸ்ரேலிய தாக்குதலில் பலியானதுக்கு பதிவிட்ட யுஇஎஃப்ஏவை பிரபல கால்பந்து வீரர் முகமது சாலா விமர்சித்துள்ளார். தெற்கு காஸாவில் மனிதாபிமான உதவிக... மேலும் பார்க்க

காஸா பட்டினிச் சாவு எண்ணிக்கை 212-ஆக உயா்வு

இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 212-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் ... மேலும் பார்க்க

ரஷியாவின் முதல் துணைப் பிரதமருடன் அஜீத் தோவல் சந்திப்பு

ரஷியாவின் முதல் துணைப் பிரதமா் டெனிஸ் மான்டுரோவை தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் ரஷிய தலைநகா் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக ஆலோசனை மேற்கொண்டாா். ரஷியா... மேலும் பார்க்க

நாகசாகி அணுகுண்டுத் தாக்குதல் நினைவுநாள்

ஜப்பானின் நாகசாகி நகரம் மீது அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதலின் 80-ஆவது ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமைகளில் கடைப்பிடிக்கப்பட்டது. இதற்காக அந்த நகரில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்ச்சியில் 95 நாடுகளைச... மேலும் பார்க்க