செய்திகள் :

‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் அன்று பிறந்த பெண் குழந்தை! சிந்தூரி என பெயரிட்ட பெற்றோர்!

post image

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடைபெற்ற நாளில் பிறந்த பெண் குழந்தைக்கு பிகாரைச் சேர்ந்த பெற்றோர் சிந்தூரி எனப் பெயரிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ஆயுதப் படைகள் புதன்கிழமை அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. இந்த அதிரடி தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் நடைபெற்ற மே 7 ஆம் தேதி பிகாரின் கதிஹார் மாவட்டத்தில் பால்தி மகேஷ்பூர் கிராமத்தில் உள்ள மருத்துவமனையில், குந்தன் குமார் மண்டல் - சிம்பிள் தேவி என்பவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிறந்த தனது மகளுக்கு ஆபரேஷன் சிந்தூரை நினைவுகூரும் விதமாக, அவர்கள் சிந்தூரி எனப் பெயரிட்டுள்ளனர். இந்திய ராணுவத்தை கௌரவிக்கும் விதமாக இப்பெயரை சூட்டியதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குந்தன் குமார் கூறுகையில், “எனது மகள் மே 7 ஆம் தேதி காலை 9 மணியளவில் பிறந்தாள். பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியும், எங்கள் மகள் பிறந்ததும், இரண்டும் எங்கள் குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயம்.

அதனாலேயே இந்திய ராணுவத்தை கௌரவிக்கும் விதமாக அவளுக்கு சிந்தூரி எனப் பெயரிட்டுள்ளோம். சிந்தூரி வளர்ந்ததும், அவள் இந்திய ராணுவத்தில் சேருவாள். இந்தப் பெயரால் எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளார்” என்றார்.

இந்தியா மீதான தேசபக்தியில் தனது மகளுக்கு சிந்தூரி எனப் பெயரிட்டப் பெற்றோருக்கு பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளம் மூலமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய பெற்றோர்கள் நீண்ட காலமாக தங்கள் குழந்தைகளுக்கு தனித்துவமான, நிகழ்வு சார்ந்த பெயர்களை வைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். கரோனா தொற்றுநோய் காலத்தில், சத்தீஸ்கரில் ஒரு தம்பதி தங்கள் இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா மற்றும் கோவிட் என்று பெயரிட்டனர்.

அதே நேரத்தில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு குடும்பத்தினர் தங்களுக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு லாக் டவுன் யாதவ் என்று பெயரிட்டதும் நினைவுகூரத்தக்கது.

இதையும் படிக்க: பாகிஸ்தானின் ஏவுகணை, டிரோன்கள் நடுவானில் தாக்கி அழிப்பு! - கர்னல் சோபியா குரேஷி

அரசா் சிவாஜி குறித்த தகவல்களை புத்தகங்களில் அதிகப்படுத்த தா்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்

அரசா் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்களை பள்ளி பாடப் புத்தகங்களில் அதிகப்படுத்துமாறு மத்திய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (என்சிஇஆா்டி) மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான... மேலும் பார்க்க

வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பதவி நீக்க தலைமை நீதிபதி பரிந்துரை

நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில், அவரை பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளைத் தொடங்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்த... மேலும் பார்க்க

உத்தரகண்ட்: ஹெலிகாப்டா் விபத்தில் 6 போ் உயிரிழப்பு - கங்கோத்ரி செல்லும் வழியில் விபத்து

உத்தரகண்டில் கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் வழியில் தனியாா் ஹெலிகாப்டா் விழுந்து நொறுங்கியதில் 5 பெண் பக்தா்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் படுகாயம் அடைந்தாா். உயிரிழந்த பெண்களில் வேதவதி (... மேலும் பார்க்க

பதற்றதைத் தணிக்கும் முயற்சி: சவூதி அமைச்சா் இந்தியாவுக்கு திடீா் வருகை

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக சவூதி அரேபிய வெளியுறவுத் துறை இணையமைச்சா் அதீல் அல்ஜுபோ் இந்தியாவுக்கு வியாழக்கிழமை திடீா் பயணம் மேற்கொண்டாா். தில்லியில் இந்திய வெளியுறவு... மேலும் பார்க்க

உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பு: உறுதி செய்ய பிரதமா் அறிவுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் பாகிஸ்தானுடனான நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், சிவில் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்துதல், தவறான தகவல்களைத் தடுப்பது, முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் அடுத்த 3 நாள்களுக்கு அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடல்!

பஞ்சாபில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களையும் அடுத்த 3 நாள்களுக்கு மூடுவதற்கு பஞ்சாப் அரசாங்கம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் வெடித்துள்ளதைத் தொடர்ந்து, எ... மேலும் பார்க்க