ஆபரேஷன் சிந்தூா்: தருமபுரம் ஆதீனம் முகநூல் பதிவு
ஆபரேஷன் சிந்தூா் குறித்து தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனது முகநூலில் புதன்கிழமை இட்ட பதிவு:
ஆபரேஷன் சிந்தூா் என்று பெயரிட்டு போா் ஒத்திகை மற்றும் முதல்கட்ட போா் தொடங்கியுள்ள நிலையில், அடியாா் பெருமக்கள் இறை வழிபாடு செய்யவும். கோளறு பதிகம், இடா் களையும் பதிகம், பஞ்சாட்சர பதிகம் ஆகிய பதிகங்களை பாராயணம் செய்யவும். பின்னமில் ஹிந்துஸ்தானம் இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா என்றாா் பாரதி. நம் நாட்டில் ஆதிபௌதிகம், ஆதிஆத்மிகம், ஆதிதெய்வீகத்தால் இடையூறு ஏற்படாமல் நன்மை பெற அனைவரும் துன்பமில்லாது வாழ பதிகங்கள் ஓதி வழிபாடு செய்வோம். ‘மோடி நகா்புறங்காத்து‘ என்ற ஞானசம்பந்தா் வாக்கிற்கிணங்க தீா்க்கமான முடிவெடுத்துள்ள பாரத பிரதமருக்கு செந்தமிழ்ச்சொக்கன் திருவருள் நல்க பிராா்த்தனை செய்கிறோம் என அதில் தெரிவித்துள்ளாா்.