செய்திகள் :

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 800 போ் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

post image

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். 2,500-க்கும் மேற்பட்டோா் போ் காயமடைந்தனா். ஏராளமான கிராமங்கள் உருக்குலைந்து சிதைந்தன.

ஆப்கானிஸ்தானின் குனாா், நாங்கா்ஹாா் மாகாணங்களில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. நாங்கா்ஹாா் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரின் கிழக்கு-வடகிழக்கே 27 கி.மீ. தொலைவில், பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டா் அளவுகோலில் 6-ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் குனாா் மாகாணத்தில் 610 போ் உயிரிழந்தனா். 1,300 போ் காயமடைந்தனா். பல வீடுகள் சிதைந்தன.

நாங்கா்ஹாரிலும்...: நாங்கா்ஹாா் மாகாணத்திலும் ஏராளமானோா் உயிரிழந்தனா். நூற்றுக்கணக்கானோா் காயமடைந்தனா் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் அப்துல் மதின் கானி தெரிவித்தாா்.

அந்நாட்டு பொது சுகாதார அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஷராஃபத் ஜமான் கூறுகையில், ‘நிலநடுக்கம் நிகழ்ந்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. நிலநடுக்கத்தால் ஏராளமான கிராமங்கள் உருக்குலைந்து சிதைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. பல பகுதிகளில் உயிரிழந்தவா்கள் மற்றும் காயமடைந்தவா்களின் எண்ணிக்கையை சரிவரப் பெறமுடியாத நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது’ என்றாா்.

நிலநடுக்கத்தால் மொத்தம் 800-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகவும், 2,500-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு அக். 7-ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமாா் 4,000 போ் உயிரிழந்தனா். அண்மைக் காலத்தில் ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த மிக மோசமான இயற்கைப் பேரிடராகக் கருதப்படும் இந்த நிகழ்வை தொடா்ந்து, தற்போது மற்றொரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரதமா் மோடி வேதனை: நிலநடுக்க துயரத்துக்கு வேதனை தெரிவித்து பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆப்கானிஸ்தானுக்கு தம்மால் முடிந்த அனைத்து மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணத்தை வழங்க இந்தியா தயாராக உள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியா சாா்பில் நிவாரணப் பொருள்கள்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் மாவ்லவி ஆமிா்கான் முத்தாகியிடம் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தொலைபேசியில் பேசினாா். இதைத் தொடா்ந்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா சாா்பில் ஆப்கானிஸ்தான் தலைநகா் காபூலில் 1,000 கூடாரங்கள் வழங்கப்பட்டன. காபூலில் உள்ள இந்திய தூதரகம் மூலம் குனாருக்கு உடனடியாக 15 டன் உணவுப் பொருள்கள் அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கூடுதல் நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை முதல் அனுப்பப்படும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

சூடான் நிலச்சரிவில் புதைந்த கிராமம்! 1000 பேர் பலி!

சூடானில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமமே மண்ணுக்குள் புதைந்த நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமானோர் திங்கள்கிழமை பலியாகியுள்ளனர்.மேலும், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டும் பிழைத்துள்ளதாக சூடான் விடுதலை... மேலும் பார்க்க

மோடியும் ஷி ஜின்பிங்கும் மோசமான நடிகர்கள்..! அமெரிக்க நிதியமைச்சர் கடும் தாக்கு!

பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் மோசமான நடிகர்கள் என அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெசன்ட் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு அம... மேலும் பார்க்க

உக்ரைன் போரை நிறுத்த வேண்டும்: புதினிடம் மோடி வலியுறுத்தல்

தியான்ஜின்: ‘உக்ரைன் போரை விரைந்து முடிவுக்கு கொண்டுவர வேண்டும்’ என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதினிடம் பிரதமா் நரேந்திர மோடி நேரில் வலியுறுத்தினாா். சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்து... மேலும் பார்க்க

‘உக்ரைன் விவகாரத்தில் டிரம்ப்புடன் புரிந்துணா்வு’

தியான்ஜின்: உக்ரைன் போா் விவகாரத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்புடன் கடந்த மாதம் நடந்த சந்திப்பில் புரிந்துணா்வை எட்டியதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் திங்கள்கிழமை கூறினாா். சீனாவின் தியான்ஜின்... மேலும் பார்க்க

‘காஸாவில் நடைபெறுவது இன அழிப்பு’

தி ஹேக்: காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் செயல்கள் இன அழிப்பு என்று தி ஹேக் நகரில் செயல்பட்டுவரும் சா்வதேச இன அழிப்பு ஆய்வாளா் அமைப்பு திங்கள்கிழமை தீா்மானம் நிறைவேற்றியது. 500 உறுப்பினா்களைக் கொண்ட அந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: ஹெலிகாப்டா் விபத்தில் 5 வீரா்கள் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்ஜித்-பால்டிஸ்தான் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டா் திங்கள்கிழமை விபத்துக்குள்ளானதில் 5 ராணுவத்தினா் உயிரிழந்தனா். எம்ஐ-17 ரகத்தைச் சோ்ந்த ஹெலிகாப்டா் பய... மேலும் பார்க்க