சாம்பியன்ஸ் டிராபி: தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் திடீர் விலகல்!
ஆப்கானிஸ்தான்: பெண்கள் வானொலி நிலையத்தை இடைநிறுத்திய தலிபான்கள்!
ஆஃப்கானிஸ்தானில் இயங்கி வந்த ஒரே பெண்கள் வானொலி நிலையத்தை இடைநிறுத்தம் செய்ததாக தலிபான் தகவல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2021-ல் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, பெண்களை அதிகமாக ஒடுக்கி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானிலுள்ள 'பேகம்' பெண்கள் வானொலி நிலையத்தில் சோதனையிட்டவர்கள், அதன் செயல்பாட்டையும் இடைநிறுத்தியுள்ளனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/g1fmfk7s/WhatsApp_Image_2025_02_06_at_1_40_04_PM.jpeg)
காபூலில் செயல்பட்டு வந்த 'பேகம் ரேடியோ நிலையம்' பெண் கல்வியை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வந்தது. ஏழாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான ஆப்கானிய பள்ளி பாடத்திட்டத்தை உள்ளடக்கிய கல்வி நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புகிறது. பெண்களால் நடத்தப்படும் இந்நிலையத்தின் தரவுகள் அனைத்தும் ஆப்கானிய பெண்களால் தயாரிக்கப்பட்டது. இந்த வானொலி நிலையத்தின் செயற்கைக்கோள் சேனலான பேகம் டிவி, ஃபிரான்சிலிருந்து இயங்குகிறது. பேகம் வானொலி நிலையம் வெளிநாட்டு ஊடகங்களோடு பணிபுரிந்ததாகக் கூறி தலிபான் அதிகாரிகள் ரேடியோ நிலையத்தை இடைநிறுத்தம் செய்திருப்பது அந்நாட்டு ஊடகங்களின் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து X சமூக வலைதளத்தில், பேகம் வானொலி வெளிநாட்டு தொலைக்காட்சி நிலையத்துக்கு தரவுகள் வழங்கி விதி மீறல் செய்திருக்கிறது. அதனால், அதன் இயக்கத்தை இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தலிபான் தகவல் அமைச்சகம் பதிவிட்டுள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2019-05/5403db2d-179a-4045-8093-4ef43659758d/34384_thumb.jpg)
பேகம் ரேடியோ நிலையம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ரேடியோ நிலையத்தின் பெண் ஊழியர்கள் உள்பட அனைத்து ஊழியர்களிடமிருந்தும் தாலிபன் அதிகாரிகள் கணினி, ஹார்டு டிரைவ், தொலைபேசி, கோப்புகள் ஆகியவற்றை கைப்பற்றினார்கள். தவிர, இரண்டு ஆண் ஊழியர்களையும் கைது செய்திருக்கிறார்கள். அவர்களை விடுவிக்க வேண்டும். எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடாமல் ஆப்கானிஸ்தான் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் கல்வியையும் ஆதரவையும் மட்டுமே வழங்கினோம்' என்று கூறப்பட்டுள்ளது. பொதுவெளியில் பெண்கள் பாடுவதற்கும் சத்தமாக வாசிப்பதற்கும் தடைவிதித்துள்ள தலிபான் அரசு, பெண் கல்வியை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வந்த வானொலியை இடை நிறுத்தம் செய்திருப்பது, அந்நாட்டின் பெண்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88