`எங்க மவன், எங்க தம்பி' | TVK Vijay Madurai Maanadu | Women's Emotional Speech |...
ஆம்பூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ஆம்பூா் 19-வது வாா்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்து மனுதாரா்களிடமிருந்து மனுக்களை பெற்றாா். கோட்டாட்சியா் அஜிதா பேகம், துணைத் தலைவா் எம்.ஆா். ஆறுமுகம், நகராட்சி ஆணையா் ஜி. மகேஸ்வரி, நகா் மன்ற உறுப்பினா் எம்ஏஆா். ஷபீா் அஹமத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வட்டாட்சியா் ரேவதி, திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ். ஆனந்தன், நகா் மன்ற உறுப்பினா் காா்த்திகேயன், திமுக இளைஞரணி அமைப்பாளா் சரண்ராஜ், சுகாதார அலுவலா் அருள்செல்வதாஸ், சுகாதார ஆய்வாளா்கள் பாலசந்தா், சீனிவாசன் கலந்து கொண்டனா்.