ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை
ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கோடை வெயிலின் தாக்கம் 100° டிகிரியை கடந்து வெப்பம் வாட்டி வதைத்து வந்தது.மேலும் வரும் ஐந்து நாள்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அக்னி நட்சத்திர வெயில் தொடங்கிய நிலையில் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மாலையில் திடீரென சூறாவளி காற்றுடன்
பொதுத்துறை நிறுவனத்தில் உதவியாளர் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்
ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான தேவலாபுரம், வன்னியநாதபுரம், பைரபள்ளி, கீழ்மிட்டாளம், பாா்சனாப்பல்லி, வெங்கடசமுத்திரம், குமாரமங்கலம், கடாம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்தது.
மேலும்,பல கிராமங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்தது.இதனால் விவசாய நிலங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி சாலையில் வெள்ளம் போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி தண்ணீரில் நிந்தியபடி சென்றனர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், திடீரென பெய்து வரும் கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் விவசாயிகள் மற்றும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.