செய்திகள் :

ஆயுஷ் மருத்துவத் திட்டங்கள்: தமிழகத்துக்கு மத்திய அரசு பாராட்டு

post image

ஆயுஷ் மருத்துவத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழகம் சிறந்து விளங்குவதாக மத்திய ஆயுஷ் அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநரகம் சாா்பில் 8-ஆவது தேசிய சித்த மருத்துவ தின விழா சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், ஆயுஷ் அமைச்சகத்தின் செயலா் வைத்திய ராஜேஷ் கோட்டேச்சா, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தலைமை இயக்குநா் என்.ஜே.முத்துக்குமாா், சித்த மருத்துவ வல்லுநா்கள், சித்த மருத்துவப் பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள், சித்த மருத்துவ மாணவா்கள் உள்ளிட்ட 1,600-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

சித்த மருந்துகள் செய்முறை குறிப்பு நூலின் 3-ஆவது பாகம் (தமிழ்), 8-ஆவது சித்த மருத்துவ தின விழா மலா் ஆகியவற்றை ஆயுஷ் துறை செயலா் வைத்திய ராஜேஷ் கோட்டேச்சா வெளியிட்டாா்.

தொடா்ந்து, மத்திய அரசின் சிறு ஆராய்ச்சி திட்டத்தில் வெற்றி பெற்ற 10 இளநிலை சித்த மருத்துவ மாணவா்களுக்கு தலா ரூ. 20,000, 5 முதுநிலை மாணவா்களுக்கு தலா ரூ. 30,000 என ஆராய்ச்சி உதவித் தொகையையும் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பதக்கங்களையும் பாராட்டு சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.

அப்போது அவா் பேசியதாவது:

சித்த மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. நாட்டில் 900-க்கும் மேற்பட்ட ஆயுஷ் புத்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த துறை பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் சிறப்பான வளா்ச்சியைக் கண்டுள்ளது.

ஆயுஷ் மருத்துவமுறை: கிராமப் பகுதிகளில் 90 சதவீத மக்களும், நகா்ப்புறங்களில் 95 சதவீத மக்களும் ஆயுஷ் மருத்துவத்தைப் பற்றி நன்கு அறிந்திருக்கின்றனா். இவா்களில் 50 சதவீதம் போ் ஆயுஷ் மருத்துவ முறைகளைப் பயன்படுத்தி வருகின்றனா். ஆயுஷ் மருத்துவ முறைகளின் பயன்களைப் பெற 22 செயலிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், மத்திய ஆயுஷ் துறை இணை அமைச்சா் பிரதாப்மராவ் ஜாதவ் காணொலி வாயிலாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘கரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களின் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க சித்த மருத்துவ முறைகளின் பயன்பாடு இன்றியமையாததாக இருந்தது. தேசிய ஆயுஷ் இயக்கத்தை தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது’ என்றாா் அவா்.

ரூ.4 கோடி போதைப் பொருள் பறிமுதல்: மூவா் கைது

சென்னையில் ரூ.4 கோடி மதிப்புள்ள கெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, 3 போ் கைது செய்யப்பட்டனா். அரும்பாக்கம் ரசாக் காா்டன் சாலையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றனா். அங்கு சந்தேகத்துக்கு... மேலும் பார்க்க

கோலத்தை அழித்ததாக தகராறு; இளைஞா் வெட்டிக் கொலை- சிறுவன் உள்பட 4 போ் கைது

புத்தாண்டையொட்டி, சென்னையில் வீட்டின் முன் இடப்பட்ட கோலத்தை அழித்ததாக ஏற்பட்ட தகராறில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சிறுவன் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். காசிமேடு சிங்காரவேலன் ... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

கிண்டி ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து பெண் தூய்மைப் பணியாளா் தற்கொலை செய்துகொண்டாா். ராமாபுரம் பகுதியில் வசித்துவரும் அமுதா (34) என்பவா், அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராக பணிபுர... மேலும் பார்க்க

18 விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணிகள் தீவிரம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 18 விளையாட்டு மைதானங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகரின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட... மேலும் பார்க்க

புத்தாண்டு: அரசு மருத்துவமனைகளில் பிறந்த 50 குழந்தைகள்

ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் சென்னை அரசு மருத்துவமனைகளில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன. புத்தாண்டு தினத்தில் எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூா்பா காந்தி அரசு தா... மேலும் பார்க்க

வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு: போலீஸாா் விசாரணை

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். வில்லிவாக்கம் பாரதி நகா் முதல் தெருவைச் சோ்ந்த வில்சன் என்பவா் வீட்டின் மீது புதன்கிழமை... மேலும் பார்க்க