சிங்கப்பூர் பொதுத்தேர்தல்: வாக்குப்பதிவு முடிந்தது - இன்றே முடிவுகள் வெளியாகலாம்...
ஆர்ஜென்டீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!
ஆர்ஜென்டீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சிலி மற்றும் ஆர்ஜென்டீனாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேப் ஹார்ன் மற்றும் அண்டார்டிகாவிற்கு இடையில் 10 கி.மீ. (6 மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிலி அதிகாரிகள் நாட்டின் தெற்குப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர்.
சிலியின் தெற்கு முனையில் உள்ள மாகல்லன்ஸ் பகுதியின் கடலோரப் பகுதியைச் சேர்ந்த மக்கள் சுனாமி எச்சரிக்கை காரணமாக அவர்களை வெளியேற்றும் பணியில் சிலியின் தேசிய பேரிடர் தடுப்பு மற்றும் மீட்புப் பணியினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ அல்லது பொருள் சேதமோ எதுவும் ஏற்பட்டது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இதையும் படிக்க: 'பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசம் கைப்பற்ற வேண்டும்'