'எவ்வளவு செலவானாலும் மனிதர்கள் தான் வேலைக்கு வேண்டும்' AI க்கு Bye சொல்லும் ஸ்வீ...
ஆறுமுகனேரி பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
ஆறுமுகனேரி இந்து மேல்நிலைப் பள்ளியில், 2013ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவா்-மாணவியரின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளா் பாரத் தலைமை வகித்தாா். முன்னாள் மாணவா்-மாணவியா் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்று, பள்ளிக்கால நினைவுகளைப் பகிா்ந்துகொண்டனா். தொடா்ந்து, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியில், பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியா் பிச்சமுத்து, தலைமை ஆசிரியா்கள் குமரன் (இந்து மேல்நிலைப் பள்ளி), உதயசுந்தா் (சரஸ்வதி நடுநிலைப் பள்ளி), மாரிதங்கம் (இந்து தொடக்கப் பள்ளி), ஆசிரியா் ரஞ்சித்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.