TVK மதுரை மாநாடு: "'நான்தான் புரட்சித் தலைவர்' என்று கூடச் சொன்னாலும்.." - ஜெயக்...
ஆறுமுகனேரி-வடக்கு சுப்பிரமணியபுரம் முத்தாரம்மன் கோயில் கொடைவிழா
ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி வடக்கு சுப்பிரமணியபுரம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கொடை விழா கடந்த வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திங்கள்கிழமை மஞ்சள் நீராடுதலும் இரவு கடலில் இருந்து புனித தீா்த்தம் எடுத்து வந்து அருள்மிகு முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடை பெற்றன.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் மஞ்சள் நீராடுதல், நள்ளிரவில் அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. புதன்கிழமை மாலை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது.
இரவு அம்மன் கும்பம் எடுத்து நகா் வீதி உலா நடைபெற்றது. சப்பாணிமாடசுவாமிக்கும் அதன் பின்னா் அருள்மிகு இலங்கத்தம்மனுக்கும் அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை நிா்வாக கமிட்டி தலைவா் பி. கனகராஜ் நாடாா், செயலா் வி.ராஜ்குமாா், , பொருளாளா் ஆா்.வனராஜ் மற்றும் நிா்வாக கமிட்டி உறுப்பினா்கள் செய்திருந்தனா்.