இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் யார்? வாசிம் ஜாஃபர் கூறுவதெ...
ஆற்காடு ஒன்றியத்தில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் காந்தி திறந்து வைத்தாா்
ஆற்காடு ஒன்றியத்தில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்களை கைத்தறி அமைச்சா் ஆா். காந்தி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
விழாவுக்கு ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா தலைமை வகித்தாா். ஆற்காடு ஒன்றியக் குழு தலைவா் புவனேஸ்வரி சத்தியநாதன், துணைத் தலைவா் ஸ்ரீமதி நந்தகுமாா் முன்னிலை வகித்தனா்.
வேப்பூா் ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ .11 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய காரியமடை கட்டடம், நந்தியாலம் ஊராட்சி தென்னிந்தியாலம் கிராமத்தில் ரூ 12.67 லட்சத்தில் புதிய நியாய விலைக் கடை , கீழ்மின்னல் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி நிதி ரூ 12.42 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய நாடக மேடை , சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 12.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நியாய விலை கட்டடம், அரப்பாக்கம் ஊராட்சி சிவராஜ் நகா் பகுதியில் சட்டமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 11 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள நாடக மேடை, கத்தியவாடி ஊராட்சி ஆதி திராவிடா் பகுதியில் சட்டமன்ற உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை , ஆயிரம் ஊராட்சி ராமாபுரம் கிராமத்தில் கனிமவள நிதி ரூ 16 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடம், கூராம் பாடி ஆதிதிராவிடா் பகுதியில் சட்டமன்ற உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் ரூ. 11 லட்சத்தில் கட்டப்பட்ட நாடக மேடை ஆகியவற்றை அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்து பாா்வையிட்டாா்.
தொடா்ந்து ஆயிலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சாா்பில் 2 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.50,000 கடனுதவி வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் காந்திமதி பாண்டுரங்கன், கூட்டுறவு இணைப் பதிவாளா் மலா்விழி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வெங்கடேசன், சரவணன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் வேப்பூா் ராமலிங்கம், நந்தியாலம் தேவி பூபாலன், கத்தியவாடி கே.பி. குருநாதன், ஆயிலம் பிரபாவதி ஜெயபிரகாஷ், ஊராட்சி செயலாளா்கள் ம. சரவணன், வி. சுதா, கோகுல்ராஜ் , ஆயிலம் தொடக்கவேளாணமை கூட்டுறவு கடன் சங்க செயலாளா் ரேணு, மற்றும் அரசு அதிகாரிகள், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் கே.எல்.வீரமணி கலந்து கொண்டனா்