செய்திகள் :

ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் விடியவிடிய லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை: ரூ.79,000 பறிமுதல்

post image

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை விடியவிடிய நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனையில், கணக்கில் வராத ரூ.79,252 மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

ஆற்காடு நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களின் தினக்கூலி ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது என புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்பேரில், மாவட்ட ஆய்வுக் குழு துணைத் தலைவா் ரமேஷ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளா் கணேசன், ஆய்வாளா் விஜயலட்சுமி உள்ளிட்ட ஆறு போ் கொண்ட குழுவினா் இரவு 7.30 மணி முதல் நகராட்சி அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

புதன்கிழமை அதிகாலை 4 மமி வரை விடியவிடிய நடைபெற்ற இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.79 ஆயிரத்து 252 போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதில் வேலைக்கு வராத 13 நபர்களுக்கு வருகை பதிவேட்டில் வேலைக்கு வந்ததாக கணக்கு காண்பித்து இந்த பணத்தை கையாடல் செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் கணக்கில் வராத பணத்தையும் சில முக்கிய ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு காரணமான சுகாதார அலுவலர் பாஸ்கரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இணையத்தில் பெண்களின் ஆபாச விடியோ: உயா்நீதிமன்றம் வேதனை

Anti-corruption police raid Arcot Municipality office in the early hours of the morning seized Rs. 79,000...

'ரெப்போ ரேட்' வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி

மும்பை: வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். 'ரெப்போ ரேட்' எனும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற... மேலும் பார்க்க

திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

திருப்பூர் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல்(52)குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் உடு... மேலும் பார்க்க

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு அதிர்ச்சியளிக்கிறது எனவும் பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன்... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 9,500 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு உபரிநீா் காவிரியில் வெளியேற்றப்படுவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து புதன்கிழமை காலை வினாடிக்கு 9,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.கேரளம், கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் ... மேலும் பார்க்க

டிராக்டர் மீது தீயணைப்பு வாகனம் மோதி விபத்து: நல்வாய்ப்பாக அனைவரும் உயிர்தப்பினர்

சேலம்: கெங்கவல்லி அருகே டிராக்டர் மீது தீயணைப்புத் துறை வாகனம் மோதியதில் தீயணைப்பு வீரர்கள் 2 பேர் காயத்துடன் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சேலம் மாவட்டம், தம்மம்பட்டி உடையார்பாள... மேலும் பார்க்க

இரு மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை: பலத்தமழைக்கு வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை அதிபலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இவ்விரு மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலா்ட்) விடுக்கப்பட்டுள்ளது... மேலும் பார்க்க