Ind vs Pak: "என் வாழ்வின் ஸ்பெஷல் இன்னிங்ஸ்; எல்லா இந்தியர்களுக்கும் சமர்ப்பணம்"...
ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே ஆற்றில் மூழ்கி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், கீழையூா் அருந்ததியா் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் (43). திருமணமாகாதவா். கூலித் தொழலாளியான இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்ததாம்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அரகண்டநல்லூா் பகுதியில் தென்பெண்ணையாறு தரைப்பாலத்துக்கு குளிக்கச் சென்ற சங்கா், ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், அரகண்டநல்லூா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.