மோசமான வானிலை: தில்லியில் 100 விமானங்கள், 26 ரயில்கள் தாமதம்!
ஆலமரத்துப்பட்டியில் கூட்டுக் குடிநீா்த் திட்டம் அமைச்சா் தொடங்கி வைத்தாா்
சின்னாளப்பட்டி அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டியில் ரூ. 20 லட்சத்தில் செயல்படுத்தப்பட்ட கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆலமரத்துப்பட்டி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமியின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கத்திலிருந்து இந்தப் பகுதிக்கு புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்தப் பணிகள் நிறைவடைந்ததையொட்டி, இதை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக அமைச்சா் இ.பெரியசாமி தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவி மகேஷ்வரி முருகேசன் தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஆறுமுகம் முன்னிலை வகித்தாா்.
இதில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் நடராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தட்சிணாமூா்த்தி, அருள்கலாவதி, ஆத்தூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.