ஆளுநரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு: தமிழக அரசு
சென்னை: குடியரசு நாளையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழிக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என். ரவி செயல்படுவதைக் கண்டித்து தேநீர் விருந்து புறக்கணிக்கப்படுவதாகவும் குடியரசு நாளை முன்னிட்டு, ஆளுநர் மாளிகையில் அளிக்கப்படும் தேநீர் விருந்தில் தமிழக அரசின் சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.