செய்திகள் :

`ஆளுநர் தேநீர் விருந்தை, தவெக தலைவர் விஜய் புறக்க ணிப்பது நல்லது' - துரை வைகோ எம்.பி!

post image

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் தனியார் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது.‌ இந்த விழாவில் ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியை அடுத்து துரை வைகோ எம்.பி. செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா விவகாரத்தில் தி.மு.க. எம்.பி., ஆ.ராசா உள்பட 'இண்டியா கூட்டணி' கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை.

பேட்டி

அதேபோல மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் விவகாரத்தில் பா.ஜ.க உள்ளிட்ட மதவாத சக்திகள் இந்துக்கள் இஸ்லாமியர்களிடையே மதக்கலவரத்தை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பா.ஜ.க.வின் பத்தாண்டு ஆட்சி கால தோல்வியை மூடி மறைப்பதற்காக வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை கையில் எடுத்துள்ளது. தமிழக மக்களும், இந்திய மக்களும் பொதுவாக சாதி- மதத்தை வைத்து அரசியல் நடத்தி வரும் கட்சிகளை புறந்தள்ளி வீட்டுக்கு அனுப்ப வேண்டும். குடியரசு தினவிழா ஆளுநரின் தேநீர் விருந்து நிகழ்ச்சியை இண்டியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் புறக்கணித்துள்ளது. ஆளுநர் தேநீர் விருந்திற்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செல்வதும், செல்லாமல் இருப்பது அவரின் கட்சி சார்ந்த முடிவு. இதில் எதுவும் சொல்ல முடியாது.

துரை வைகோ எம்.பி

ஆனால் தமிழ்நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் எதிராக செயல்படும் ஆளுநரின் தேநீர் விருந்தை விஜய் புறக்கணிப்பதுதான் நல்லது. ஆளுநரின் தேநீர் விருந்தில் விஜய் கலந்து கொண்டால் அவர் கட்சிக்குத்தான் கேடு. விஜய், புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளார், அவர் நல்லா இருக்கட்டும்" எனக் கூறினார்.

புதினை `லெஃப்ட் ஹேண்டில்’ டீல் செய்யும் ட்ரம்ப்... ரஷ்யா பணிந்து முடிவுக்கு வருமா உக்ரைன் போர்?!

பேச்சுக்கு அழைக்கும் புதின்எச்சரிக்கும் ட்ரம்ப்உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர புதின் தவறினால், ரஷ்யா மீது அதிக வரிகளையும், மேலும் பொருளாதாரத் தடைகளையும் விதிக்கப் போவதாக டொனால்ட் ட்ரம்ப் விடுத்த... மேலும் பார்க்க

மாநகராட்சியுடன் இணைக்கக்கூடாது... எம்.ஆர்.விஜயபாஸ்கர் எதிர்ப்பு; கிராம சபைக் கூட்டத்தில் தள்ளுமுள்ளு

கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள 157 ஊராட்சிகளில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததால், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் தலைமையில், குடியரசு தின விழாவை முன்னிட்டு நேற்று (ஜன... மேலும் பார்க்க

'காலை உணவுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைப்பதா?' - காட்டமாக கேள்வி எழுப்பும் அன்புமணி

சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு பரிமாறப்படும் காலை உணவை தயாரித்து வழங்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்திருப்பதாக குற்றம்சாட்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்... மேலும் பார்க்க

Rahul Gandhi: நேதாஜி மறைவு குறித்த பதிவு; ராகுல் காந்தி மீது FIR பதிவு செய்த காவல்துறை

ஜனவரி 23 அன்று இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் எக... மேலும் பார்க்க

Vijay: `இப்போ பெரியவங்களுக்குள்ள சண்டை; அவரை விடுங்க’ - விஜய் குறித்த கேள்வியை தவிர்த்த சீமான்

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தொடங்கியபோது, அவரை வரவேற்றுப் பேசியவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆனால், விழுப்புரத்தில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநா... மேலும் பார்க்க