ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்தது!
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்ததாக இந்திய வானிலை மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
இன்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ஆந்திரம் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியில் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அதே இடத்தில் நகராமல் இருப்பதால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகின்றது.
இதையும் படிக்க : சென்னை, புறநகரில் இன்றும் நாளையும் மழை பெய்யும்!
இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் டிச.26 முதல் டிச.31 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுச்சேரி உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.