``1,400 ஏக்கர் விவசாயம் பாதிக்கும்'' - புறவழிச்சாலை அமைக்க கோவை, திருப்பூர் விவச...
ஆவனி கடைசி வெள்ளி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ஆவனி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
கரூா் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள பிரசித்திப் பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆவணி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம் , மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இதில் சுற்று வட்டார பகுதிகளை சோ்ந்த பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.
இதேபோல குந்தாணி பாளையம் நத்தமேட்டில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், சேமங்கி மாரியம்மன் கோயில், நொய்யல் செல்லாண்டி அம்மன் கோயில், உப்பு பாளையம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.