18 ஆண்டுகளில் 15,000 உடற்கூறாய்வுகளை மேற்கொண்ட இந்தூா் மருத்துவா்!
ஆவின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தல்
ஆவின் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அறிவுறுத்தினார்.
சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் தமிழ்நாடு
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் - ஆவினில் உள்ள அனைத்து துறைத்தலைவர்கள் மற்றும் பெருநகர பால் பண்ணை அலுவலர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தொடக்கத்தில் அரசு செயலாளர் திட்டப்பணிகள் முன்னேற்றத்தை எடுத்துரைத்த அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், செயல்பாட்டில் உள்ள 9269 கிராம அளவிலான கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களில் இருந்து நாளொன்றுக்கு 36 இலட்சத்து 86 ஆயிரம் லிட்டராக உள்ள பால் கொள்முதலை அதிகரிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனை எய்துவதற்கு 87 வாய்ப்புள்ள ஒன்றியங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மற்றும் செயலிழந்த கூட்டுறவு சங்கங்களை மீள செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
தற்போது மாதவரம், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், அச்சரப்பாக்கம், நாமக்கல் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றுவரும் பால் பண்ணை மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு ஆலைப் பணிகளையும் மற்றும் கடலூர் மாவட்டம் - புதுக்குடி, தஞ்சாவூர் மாவட்டம் -திட்டக்குடியில் நடைபெற்று வரும் புதிய கால்நடை தீவன ஆலைப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார்.
1.4.2024 முதல் நாளது தேதிவரை 262 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டும், 131 செயல்படாத பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை செயல்படும் நிலையிலும் மற்றும் 111 கலைத்தல் நிலையில் இருந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை மீட்சி செய்தும் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருவதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளது தேதி வரை 272 புதிய பால் சேகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள அனைத்துப் பதிவேடுகளும் கனிணிமயமாக்க மார்ச் 2024 முதல் நடவடிக்கை துவங்கப்பட்டு தற்போது 3,311 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் கணக்குகள் முழுமையாக
கணினிமயமாக்கப்பட்டுள்ளது. இப்பணி தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
தொடக்கப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் உற்பத்தியாளர்களின் நலன் கருதியும், பால் உற்பத்திக்கான செலவு, இடு பொருட்களின் விலையுயர்வினை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு அரசு பசும்பால் மற்றும் எருமைப் பால் லிட்டர் ஒன்றிற்கு ரூ.3 வீதம் ஊக்கத் தொகையாக 18.12.2023 முதல் வழங்கி வருகிறது.
அரசிடம் தொகையை பெறுவதற்கு தொடர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 20 சதவிகிதம் ஆவின் பால் மற்றும் பால் உபப்பொருட்கள் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறும், எதிர்வரும் கோடைக் காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு தயிர், மோர், லஸ்ஸி, மில்க்க்ஷேக், ஐஸ்கிரீம் போன்ற பால் உபப்பொருட்களின் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு
உத்தரவிட்டார். பிப்ரவரி மாதம் ஆவின் நாளை முன்னிட்டு மக்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் ஆவின் உபப்பொருட்களை பிரபலப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்த அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் மேலாளர் (கால்நடை மருத்துவம்) பதவிக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 8 நபர்களுக்கு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரிய பணி நியமன ஆணையை பால்வளத்துறை அமைச்சர்
வழங்கினார்.
இந்த கூட்டத்தில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, அரசுச் செயலாளர், மருத்துவர் ந.சுப்பையன், பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை,
இணை நிர்வாக இயக்குநர் க.பொற்கொடி , பொது மேலாளர்(நிர்வாகம்) மற்றும் இதர பிரிவுகளை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.