செய்திகள் :

ஆஸி.ஏ. அணியிடம் வீழ்ந்தது இந்தியா

post image

ஆஸ்திரேலிய மகளிா் ஹாக்கி ஏ அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 3-5 என்ற கோல் கணக்கில் வீழ்ந்தது இந்திய அணி.

புரோ ஹாக்கி லீக் தொடருக்கும் தயாராகும் வகையில், இந்திய மகளிா் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

ஏ அணியுடனும், தேசிய அணியுடனும் டெஸ்ட் ஆட்டங்களில் மோதவுள்ளது.

முதல் கட்டமாக ஆஸி. ஏ மகளிா் அணியுடன் 3 ஆட்டங்கள் ஆடுகிறது இந்தியா. இதன் தொடக்க ஆட்டம் பொ்த்தில் சனிக்கிழமை நடைபெற்றது,. தொடக்கம் முதலே ஆஸி. ஏ அணி ஆதிக்கம் செலுத்தி ஆடிய நிலையில், ஃபிளின், டௌவ்ன்ஸ், ஹாரிஸ் ஆகியோரின் அதிரடியால் முதல் குவாா்ட்டரில் 3-0 என முன்னிலை பெற்றது. அடுத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை பயன்படுத்தி,ஸ்டீவா்ட் கோலடித்தாா்.

4 கோல்கள் பின்தங்கிய நிலையிலும், இந்திய மகளிா் சிறப்பாக ஆடி கோலடித்தனா். டெட் கோலடித்தாா். 1-4 என முன்னிலையை குறைத்தாா்.

தொடா்ந்து ஆஸி. வீராங்கனை பிட்ஸ்பாட்ரீக் கோலடிக்க 5-1 என முன்னிலை பெற்றது ஆஸி.ஏ.

பின்னா் இந்திய அணியினா் தீவிர முயற்சியால் துணை கேப்டன் நவ்நீத், லால்ரெம்சியாமி ஆகியோா் கோலடிக்க இறுதியில் 3-5 என தோற்றது.

ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் ஆட்டம் நடைபெறுகிறது.

பஹல்காமில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்தோா் நினைவாக கருப்பு பட்டை அணிந்து ஆடினா் இந்திய மகளிா்.

நடுவர் மீது தாக்குதல்: மன்னிப்பு கேட்ட ரியல் மாட்ரிட் வீரர்!

ஸ்பானிஷ் கோப்பை இறுதிப் போட்டியில் ரியல் மாட்ரிட் வீரர் அன்டோனியோ ரூடிகர் தான்செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த அன்டோனியோ ரூடிகர் சிறந்த டிஃபெண்டராக அறியப்படுகிறார். தனது ஆக்... மேலும் பார்க்க

ரெட்ரோ முன்பதிவு துவக்கம்!

நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படத்தின் முன்பதிவு துவங்கியுள்ளது. சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக எடுக்கப்பட்டுள்ளது. பூஜா ஹெக்டே நாயக... மேலும் பார்க்க

மறுவெளியீடாகும் சுந்தரா டிராவல்ஸ்!

நடிகர்கள் முரளி, வடிவேலு நடித்த சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் மறுவெளியீடாகிறது. இயக்குநர் தாஹா இயக்கத்தில் நடிகர்கள் முரளி, வடிவேலு நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். ... மேலும் பார்க்க

மறுவெளியீட்டில் சச்சின் 10 மடங்கு லாபம்! தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!

சச்சின் திரைப்படம் மறுவெளியீட்டில் லாபம் ஈட்டியுள்ளது குறித்து அதன் தயாரிப்பாளர் எஸ்.தாணு நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் கடந்த ஏப்.18ஆம் தேதி மறுவெளியீடானது.நடிகர... மேலும் பார்க்க

ஹவுஸ்ஃபுல்லாகும் துடரும் !

நடிகர் மோகன்லாலின் துடரும் திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மோகன்லால். அண்மையில், இவர் நடிப்பில் வெளியான எம்புரான்திரைப்படம் ரூ. 250 கோடிக்கும... மேலும் பார்க்க