செய்திகள் :

ஆஹா... கலக்கலா இருக்கே சாய்! கேட்க கேட்க பிடிக்கும் ஊறும் பிளட்!

post image

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் முதல் தமிழ்ப் பாடல் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “டூட்”. மலையாள நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடலான ‘ஊறும் பிளட்’ பாடல் கடந்த வியாழக்கிழமை வெளியானது. இதுவே, சாய் அபயங்கரின் முதல் தமிழ் சினிமா பாடலாகும். இதற்கு முன் வெளியான மலையாளப் படமான பல்டியில் இடம்பெற்ற ஜாலக்காரி பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

ஆனால், சாய் அபயங்கரின் முதல் தமிழ்ப் பாடலான ஊறும் பிளட் ஒன்றுமே புரியாத வகையில் இருப்பதாகவும் இசையை ரசிக்கவும் முடியவில்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.

தற்போது, ஆச்சரியப்படும் வகையில் இப்பாடலை முதலில் புறக்கணித்தவர்கள்கூட மீண்டும் கேட்க கேட்க நன்றாக இருப்பதாகக் கூறி வருகின்றனர். பால் டப்பா எழுதிய இப்பாடலின் வரிகளான, “ஒரு அலை அவ, கலை அவ, அழகிய நிலவு அவ, நிலவில் ஜொலிக்கிற நிரந்தர ஒளி அவ” என்கிற வரிகளும், “ராஜாதி ராஜன் நான், ராவான ராவணா” வரிகளும் 2கே ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்பாடல் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டு வருவதால் யூடியூபில் இதுவரை 10 கோடி பார்வைகளை நெருங்கியதுடன் சாய் அபயங்கருக்கு வாழ்த்துகளுக்கும் குவிந்து வருகிறது.

இதையும் படிக்க: அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்... ஹிருதயபூர்வம் பற்றி மாளவிகா!

இறுதிச்சுற்றில் சபலென்கா - அனிசிமோவா பலப்பரீட்சை

நடப்பு டென்னிஸ் காலண்டரின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், நடப்பு சாம்பியனான பெலாரஸின் அரினா சபலென்கா - அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா ஆகியோா் பலப்பரீட்ச... மேலும் பார்க்க

பிரக்ஞானந்தா, வைஷாலி வெற்றி

ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் ஆா்.பிரக்ஞானந்தா, அவரின் சகோதரி ஆா்.வைஷாலி உள்பட 6 இந்தியா்கள் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றனா். இதில் ஓபன் பிரிவில், வெள்ளை நிற காய்களுடன் களமாடிய ப... மேலும் பார்க்க