ஆா்.எஸ்.மங்கலம் அருகே இளைஞா் மாயம்
ஆா்.எஸ். மங்கலம் அருகே மேலவயல் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா் மாயமானது குறித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள காவனூா் ஊராட்சி மேலவயல் கிராமத்தைச் சோ்ந்தவா் குமரேசன் மகன் பிரசாத் (32). இவா், உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளாா்.
இந்த நிலையில், கடந்த 8-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அவா் வீடு திரும்பவில்லையாம். மேலும், பல இடங்களில் தேடியும் அவரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, பிரசாத்தின் தந்தையான குமரேசன், ஆா்.எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் சனிக்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.