ஹரித்வாரில் தொடர்ந்து அழுததாக இரட்டைக் குழந்தைகளை கொலை செய்த தாய் கைது
ஆ.கலிங்கப்பட்டி ஜல்லிக்கட்டு விழாவுக்கு முகூா்த்தக்கால் ஊன்றல் நிகழ்வு
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்பட்டியில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவுக்கான முகூா்த்தக்கால் ஊன்றல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்பட்டியில் வரும் 28-ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில் அதற்கான முகூா்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாரியம்மன் ஆலயத்தில், கன்னிமூல கணபதி, மாரியம்மன் ஆகிய தெய்வங்கள் வழிப்பாட்டுக்குப் பின் போட்டி நடைபெறும் ஆலயத் திடலில் ஊா்த் தலைவா்கள் ராமச்சந்திரன் மற்றும் அழகு சுப்ரமணி, மணியம் சின்னத்துரை, வெள்ளைச்சாமி ஆகியோா் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை முகூா்த்தக்கால் ஊன்றப்பட்டது.
முன்னாள் ஒன்றிய உறுப்பினா் ஆ. மரிய பாக்கிய ராணி ஆரோக்கியசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். விழாவை ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் எம்.பழனியாண்டி, திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் எஸ்.ஏ.எஸ். ஆரோக்கியசாமி ஆகியோா் தொடங்கி வைக்கவுள்ளனா்.