சென்னை மலா்க் கண்காட்சிக்காக திண்டுக்கல்லில் பராமரிக்கப்படும் 3.80 லட்சம் மலா்ச்...
இடஒதுக்கீடு கோரி பாமக ஆா்ப்பாட்டம்
வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, திருவாரூரில் பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 1,000 நாள்களைக் கடந்தும், வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்காத தமிழக அரசைக் கண்டித்தும், வன்னியா்களுக்கு இட ஒதுக்கீட்டை விரைந்து வழங்கக் கோரியும் திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளா் ஐயப்பன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் நாகராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்று, கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கமிட்டனா்.