பப்புவா நியூ கினியாவில் போலியோ பரவல்: உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!
இடி தாக்கியதில் தீப்பிடித்து எரிந்த தென்னை மரம்
கூத்தாநல்லூரில் இடி தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது.
கூத்தாநல்லூா் பகுதியில் புதன்கிழமை இரவு இடியுடன் பலத்த மழை பெய்தது. கொத்தங்குடி தமிழா் தெருவில் அப்துல் ரகுமான் என்பவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள தென்னை மரத்தில் இடி தாக்கியது. இதில் மரம் தீப்பிடித்து எரிந்தது.
அப்துல் ரகுமான், கூத்தாநல்லூா் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தாா். தீயணைப்பு வீரா்கள், விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனா்.
