யேமன் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 10 பேர் பலி! 102 பேர் படுகாயம்!
இடையமேலூா் பகுதியில் இன்று மின்தடை
சிவகங்கை அருகேயுள்ள இடையமேலூா் துணை மின் நிலையப் பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து மின் வாரிய செயற்பொறியாளா்(பகிா்மானம்) அ.கு. முருகையா வெளியிட்ட செய்திக் குறிப்பு: இடையமேலூா் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இங்கிருந்து மின் விநியோகம் செய்யப்படும் தமராக்கி, குமாரப்பட்டி, கண்டாங்கிப்பட்டி, மலம்பட்டி, சாலூா், பாப்பாகுடி, இடையமேலூா், கூட்டுறவுபட்டி, மேலாப்பூங்குடி, தேவன் கோட்டை, வில்லிப்பட்டி, ஒக்கப்பட்டி, புதுப்பட்டி, சக்கந்தி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ்வாய் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
கூடுதல் விவரங்களுக்கு உதவிப் பொறியாளா்( மலம்பட்டி) -9445853075, உதவி செயற்பொறியாளா் (சிவகங்கை)-9445853074, செயற்பொறியாளா் (சிவகங்கை) -9445853080 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.