செய்திகள் :

'இதனால்தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்'- ஸ்டாலின் உடல்நலம் குறித்து அமைச்சர் மா.சு

post image

லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் (ஜூலை 21) அனுமதிக்கப்பட்டார்.

மூன்று நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்ந்து வருகிறார்.

மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

இந்நிலையில் முதல்வரின் உடல்நலம் குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். ``முதல்வர் நன்றாக இருக்கிறார்.  உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு ஒருநாள் முன்னாடி, அவர் உயிராக மதித்த சகோதரர் மு.க முத்துவின் இறுதிசடங்கில் ஒரு நாள் முழுவதும் இருந்தார்.  

காலையில் இருந்து சாப்பிடாமல் இருந்தார். மறுநாள் ஒன்றரை கிலோ மீட்டர் முதல்வர் நடந்து முடித்த பிறகு, தலைசுற்றல் ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

மு.க முத்துவின் இறுதிசடங்கில் ஸ்டாலின்
மு.க முத்துவின் இறுதிசடங்கில் ஸ்டாலின்

நேற்றும், நேற்று முன்தினமும் பரிசோதனைகள் முடித்து இருக்கிறார்கள்.இன்றைக்கு மருத்துவமனையில் ரிப்போர்ட் கொடுப்பார்கள். சிகிச்சை முடிந்து எப்போது வீடு திரும்புவார் என்று டாக்டர்கள் இன்று கூறுவார்கள்” என்று  மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

BJP தலைமையை கோபமாக்கிய Jagdeep Dhankar -ன் 2 சந்திப்புகள்! | MODI ADMK TVK| Imperfect Show 23.7.2025

* தன்கர் ராஜினாமா எதிர்க்கட்சிகள் கேள்வி?* அடுத்த குடியரசு துணைத் தலைவர் நிதிஷ் குமார்..?* துணை குடியரசு தேர்தல் எப்போது?* பீகார் வாக்காளர் பட்டியல் திருத்த விவாதம்... நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?* ... மேலும் பார்க்க

STALIN-க்கு ஷாக் தரும் 'EPS-ANBUMANI' மூவ்...காப்பாற்றுவாரா E.V VELU?! | Elangovan Explains

'சி.எம் மு.க ஸ்டாலின் உடல்நிலை பரவாயில்லை. பி.பி அதிகமாகியது தான், ஓய்வெடுக்க காரணம்' என்கிறார்கள் திமுக-வினர். இதில் முக்கிய பங்கு மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதில் தொடங்கி எதிர்க்கட்சிகள் வைக்க... மேலும் பார்க்க

"அதிமுக-வை பாஜக விழுங்கிய கதை" - பட்டியலிடும் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே இருப்பதால் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் தேர்தல் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.அதில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி ... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரம்: ”இராஜேந்திர சோழனின் 1,054 வது பிறந்தநாள் விழா”- கவனம் பெற்ற மோடி வருகை!

மாமன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்த தினம் ஆடி திருவாதிரை திருவிழாவாக கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இது அரசு விழாவாக கொண்டாடப்படும் என கடந்த 2023ம் ஆண்டு அரசு அறிவித்தது. அதன்படி இரா... மேலும் பார்க்க