இறுதிப் போட்டியில் மோதும் இந்தியர்கள்: வெல்லப்போவது யார்? - சூடுபிடித்த உலக செஸ்...
இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர்
இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் ஷெபாஸ் ஷெரீப்பை நேரில் சந்தித்து பிரிட்டன் தூதரக அதிகாரி ஜேன் மேரியட் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.
தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் மற்றும் பாகிஸ்தான் பிரிட்டன் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக, பாகிஸ்தானில் உள்ள பிரிட்டன் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:
”பாகிஸ்தான் - இந்தியா மோதலின்போது பதட்டங்களைத் தணிப்பதில் பிரிட்டனின் செயல்பாட்டுக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். மேலும், இந்தியாவுடன் நிலுவையில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக தெரிவித்தார்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த மே 7 ஆம் தேதி இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்தியது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது.
இதனைத் தொடர்ந்து, எல்லையில் இந்தியா - பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே மோதல் வெடித்தது. மூன்று நாள்கள் நடைபெற்ற மோதல் மே 10 ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு பிறகு நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியிருந்தது.