Bengali Cinema: அப்போது இந்திய சினிமாவின் முகம்; ஆனால் இன்று.? - பெங்காலி சினிமா...
அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்னிந்திய கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வியாழக்கிழமை (ஜூலை 24) முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்றும் வீசக்கூடும்.
அடுத்த 3 மணிநேரத்துக்கு வியாழக்கிழமை காலை(ஜூலை 24) 10 மணி வரை நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, புறநகா் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
குறைந்த விலை வீடுகளின் விற்பனை 32% சரிவு
Heavy rain is likely to occur at one or two places in the Nilgiris, Theni, Tenkasi, Kanyakumari, Coimbatore and Tirunelveli districts of Tamil Nadu for the next 3 hours.