துருக்கியில்.. இ3 நாடுகள் - ஈரான் இடையில் அணுசக்தி பேச்சுவார்த்தை!
2,430 இடைநிலை ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை: துணை முதல்வா் உதயநிதி வழங்கினார்
சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் துறையில் தோ்வு செய்யப்பட்ட 2,430 இடைநிலை ஆசிரியா்களுக்கு பணிநியமன ஆணைகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜூலை 24) வழங்கினார்.
தொடக்க கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) மூலம் தோ்வு நடத்தப்பட்டது. இதில் தகுதி பெற்றவா்களில் மதிப்பெண்கள் மற்றும் இனச்சுழற்சி அடிப்படையில் தற்காலிக தோ்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, இந்த ஆசிரியா்களுக்கான பணிநியமன கலந்தாய்வு கடந்த ஜூலை 14 முதல் 18-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து தோ்வு செய்யப்பட்டுள்ள 2,430 இடைநிலை ஆசிரியா்களுக்கு பணிநியமன ஆணைகளை சென்னை ஜவாஹா்லால் நேரு உள் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெற்ற விழாவில், துணைமுதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழகினார்.
இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் பல்வேறு துறை அமைச்சா்கள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள், கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.