திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் - சட்டப்பேரவை பொதுக் கணக்...
``இது என் மனைவி முதல் முறையாக வாங்கிக் கொடுத்தது!'' - மாணவனின் கேள்விக்கு யுகபாரதியின் பதில்!
பாடலாசிரியர் யுகபாராதியின் `மஹா பிடாரி' புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த புத்தக வெளியீட்டு விழாவின் காணொளிகள் ஒவ்வொன்றாக சினிமா விகடன் யூட்யூப் தளத்தில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. திரைப்பட இயக்குநர் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பாடலாசிரியர் யுகபாரதி பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்தார்கள். இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் பலரும் இந்த `மஹா பிடாரி' கவிதை தொகுப்புப் பற்றியும், யுகபாராதியின் மற்ற பக்கங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினார்கள்.

அந்த வரிசையில் ஒரு மாணவர் `உங்களின் காணொளிகளை இந்த நிகழ்வுக்காக அதிகமாக பார்த்திருந்தேன். அனைத்து பழைய காணொளிகளையும் பார்த்திருந்தேன். அன்றிலிருந்து, இப்போது நீங்கள் கட்டியிருக்கும் இதே கறுப்பு வாட்ச்சைத்தான் கட்டியிருக்கிறீர்கள்....' என்றார். இதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த யுகபாரதி, ``கவிதை தொகுப்பை படிக்கச் சொன்னால் என்னுடைய கடிகாரம் வரை படித்து வைத்திருக்கிறீர்கள். இது காதல் கவிதை தொகுப்பு என்பதால் இன்னொரு விஷயத்தை சொல்கிறேன். இது என்னுடைய மனைவி திருமணமானதும் முதல் முறையாக வாங்கிக் கொடுத்த வாட்ச்!" என புன்னகையுடன் முடித்துக் கொண்டார்.