செய்திகள் :

இத்தாலி கார் பந்தயம்: அசத்திய அஜித் குமார் அணி!

post image

இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் ரேசிங் அணி மூன்றாவது இடம்பிடித்துள்ளனர்.

துபையில் நடைபெற்ற 24ஹெச் சீரிஸ் கார் பந்தயத்தில் கடந்த ஜனவரி மாதம் இந்தியா சார்பில் ’அஜித்குமார் ரேஸிங்’ என்கிற பெயரில் நடிகர் அஜித் குமார் தன் குழுவினருடன் கலந்துகொண்டார்.

அங்கு நடைபெற்ற 911 ஜிடி3 ஆர் என்கிற கார் பந்தயப் பிரிவில் அஜித் குமார் ரேஸிங் (901) அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். அஜித் அணிக்கு 'ஸ்பிரிட் ஆப் தி கேம்' விருது வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இத்தாலியில் நடைபெற்ற முகெல்லோ 12ஹெச் ரேஸில் மார்ச் 23 அன்று அஜித்குமார் ரேஸிங் அணி கலந்துகொண்டது.

தொடர்ந்து 12 மணி நேரம் நடைபெறும் இந்தப் பந்தயத்தில் ஜிடி992 பிரிவில் களமிறங்கிய அஜித் அணி மூன்றாம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.

இதையும் படிக்க | தனுஷ் - அஜித் கூட்டணி! தயாரிப்பாளர் சொன்னது என்ன?

வெற்றி பெற்ற பின்னர் அஜித் தனது அணியினருடன் இந்திய கொடியை ஏந்திவந்தார். பின்னர், தன்னைக் காண வந்த ரசிகர்களிடம் வெற்றிக் கோப்பையை காட்டிய அஜித் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

துபையைத் தொடர்ந்து மீண்டும் அஜித்குமார் ரேசிங் அணி இத்தாலியில் மூன்றாம் இடம்பிடித்து அசத்தியுள்ள நிலையில் திரைத் துறையினரும், ரசிகர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10 வெளியாகவுள்ள நிலையில், கார் பந்தயத்தில் அஜித் அணி வெற்றி பெற்றிருப்பது அவரது ரசிகர்களை மேலும் உற்சாகமாக்கியுள்ளது.

கலைத்துறை பங்களிப்புக்காக நடிகர் அஜித்துக்கு மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திரையரங்கில் துரத்திய ரசிகர்கள்..! ஆட்டோவில் தப்பிச்சென்ற விக்ரம்!

நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் நேற்று (மார்ச்.27) மாலை தாமதமாக வெளியானது. சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, து... மேலும் பார்க்க

எம்புரான் படத்தினால் வரலாறு படைத்தோம்..! மோகன்லால் பெருமிதம்!

நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் பதிவில் எம்புரான் படத்தினால் வரலாறு படைத்தோம் எனக் கூறியுள்ளார். எம்புரான் திரைப்படம் நேற்று (மார்ச்.27) திரையரங்குகளில் வெளியானது. இது 2019இல் பிருத்விராஜ் இயக்கிய லூசிபர்... மேலும் பார்க்க

மியாமி ஓபன்: முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா!

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப் போட்டியில் ஜாஸ்மின் பலோனியை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ஆர்னா சபலென்கா. போட்டி தரவரிசையில் முதலிடத்தி... மேலும் பார்க்க

ஏடிபி மாஸ்டர்ஸில் புதிய சாதனை படைத்த ஜோகோவிச்!

செர்பியாவின் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் மியாமி ஓபனில் அரையிறுத்திக்கு முன்னேறியுள்ளார். அதன்மூலம் புதிய சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார். செர்பியாவின் நட்சத்திர வீரர் ஜோகோவிச் செபாஸ்டியன் மியாம... மேலும் பார்க்க

இந்த நாள் இனிய நாள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.28-03-2025வெள்ளிக்கிழமைமேஷம்:இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத... மேலும் பார்க்க

சிஎஸ்கே ஸ்பான்ஸா் ஆன ரீஃபெக்ஸ்

பல்வேறு துறைகளில் தொழில் செயல்பாடுகளை மேற்கொண்டுவரும் குழுமங்களில் ஒன்றான ரீஃபெக்ஸ், சென்னை சூப்பா் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் அதிகாரபூா்வ ஸ்பான்ஸா் ஆகியுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்த... மேலும் பார்க்க