செய்திகள் :

இந்தியர்களுக்கு அநீதி இழைக்கும் அமெரிக்கா; பிரதமர் மோடி மௌனம்! காங்கிரஸ் குற்றச்சாடு

post image

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை அமெரிக்கா நாடு கடத்தியது.

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் நாடு கடத்தும் பணியில் அமெரிக்க அரசு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், நாடு கடத்தப்படும் இந்தியர்களுடன் அமெரிக்க சி-17 விமானம் செவ்வாய்க்கிழமையில் அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, இன்று இந்தியாவில் பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் விமான நிலையத்தை அடைந்தது. பஞ்சாபில் இருந்து அந்தந்த மாநிலங்களுக்கு இந்தியர்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இந்த நிலையில், விமானத்தில் இந்தியர்களின் கைகளை விலங்கால் கட்டி, அழைத்து வரப்பட்டது போன்ற புகைப்படங்கள் வெளியானதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்தது. இந்தியர்களுக்கு நேர்ந்த அநீதி குறித்து எதுவும் பேசாமல் பிரதமர் நரேந்திர மோடி மௌனம் சாதிப்பதாக காங்கிரஸார் கூறினர்.

இதையும் படிக்க:ஏஐ செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

அமெரிக்காவில் பெரியளவிலான நாடு கடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதிபர் தேர்தலின்போதே டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் அதிபரானவுடன், அதற்கான நடவடிக்கையில் அதிபர் டிரம்ப்பின் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களையும் நாடு கடத்தும் பணியை அமெரிக்கா மேற்கொண்டது.

இதனிடையே, சட்டவிரோதமாகக் குடியேறிய 205 இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் அமெரிக்க அரசு இந்தியாவுக்கு அனுப்பியது. அமெரிக்காவில் குடிவரவுத் துறைதான் நாடு கடத்தல் பணியை மேற்கொள்ளும். ஆனால், தற்போதைய டிரம்ப்பின் ராணுவத்தின் மூலமாக, சி-17 ராணுவ விமானம் மூலம் சட்டவிரோதக் குடியாளர்களை அனுப்பி வைக்கிறது.

நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது: ஜகதீப் தன்கா்

ஜெய்பூா்: வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது என்றும் வேளாண் அறிவியல் மையங்களை விவசாயிகள் பயன்படுத்திப் பலன் அடைய வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார... மேலும் பார்க்க

மோடி அமெரிக்காவுக்குச் சென்றுவந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா?

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குச் சென்று வந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பிப். 12, 13 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயண... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் யார்? அமித் ஷாடன் நட்டா சந்திப்பு!

தில்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேரில் சந்தித்தார். தில்லி புதிய முதல்வரை தேர்வு செய்வது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாஜக விரைவில் அ... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சி அமைத்ததும் பாஜகவின் முதல் திட்டம்!

தில்லியில் முறையாக ஆட்சி அமைத்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்திலுள்ள ஊழல் வழக்குகளை ஆராய சிறப்பு விசாரணைக் குழு அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. நடைபெற்றுமுடிந்த தில்லி சட்டப் பேரவைத் தோ்தல... மேலும் பார்க்க

2026-ல் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: தர்மேந்திர பிரதான்

2026-ல் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (பிப். 9) தெரிவித்தார். இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களுட... மேலும் பார்க்க

மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா!

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் அஜய்குமார் பல்லாவிடம் வழங்கினார். மேலும் பார்க்க