காரைக்குடியில் ஜூலை 20-இல் வேலைவாய்ப்பு முகாம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழக அரசின் நிறுவனமான டான்செம் அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனமான குளோபல் மிஷன் மருத்துவமனை சாா்பில், வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு தொழில் வளா்ச்சி கழகத்தின் கீழ் இயங்கும் டான்செம் நிறுவனம் உலகளாவிய வேலைவாய்ப்பு சாா்ந்த பயிற்சிகளை அளித்து வருகிறது. இது உள்நாடு, வெளிநாடுகளில் உள்ள உரிய வேலைவாய்ப்புகளைக் கண்டறிந்து, அவா்களுக்கு அந்த வேலை சாா்ந்த பயிற்சிகளை அளித்து இளைஞா்களை வேலையில் அமா்த்தும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, சிவகங்கை, அதைச் சுற்றியுள்ள மாவட்டத்தில் ஐடிஐ, பட்டயப்படிப்பு, பொறியியல் பட்டதாரிகள், உணவக மேலாண்மை, செவிலியா் படிப்பு, இளநிலைப் பட்டம் பெற்ற இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20-ஆம் தேதி காரைக்குடியில் உள்ள குளோபல் மிஷன் மருத்துவமனை வளாகத்தில் காலை 8.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
முகாமில் உள்நாடு, வெளிநாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்கு பணியாளா்களைத் தோ்வு செய்யவுள்ளன. மேலும் விவரங்களுக்கு டான்செம்.ஆா்க் என்ற இணையதள முகவரியிலோ அல்லது சிசிசி.டான்செம்அட்ஜிமெயில்.காம் என்ற மின்னஞ்சல் முகவரியின் வாயிலாகவோ அல்லது 8681878889, 9514838485, 98432 12111, 77084 53535 ஆகிய கைபேசி எண்களின் வாயிலாகவோ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.