பைக் கிடைக்காத விரக்தியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
தேனி மாவட்டம், கம்பத்தில் இரு சக்கர வாகனம் கேட்டு, கிடைக்காத விரக்தியில் இளைஞா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கம்பம் நாட்டாண்மைக்காரா் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் மனோஜ்குமாா் (24). கூலி வேலை செய்து வந்த இவா், கடந்த ஒரு வாரமாக இரவில் மது அருந்திய நிலையில் வீட்டுக்கு வந்து, தனக்கு இரு சக்கர வாகனம் வாங்கித் தருமாறு தந்தையைத் தொந்தரவு செய்தாராம்.
இரு சக்கர வாகனம் கிடைக்காத விரக்தியில், வீட்டை விட்டுச் சென்ற மனோஜ்குமாரை தந்தை திங்கள்கிழமை அழைத்து வந்துள்ளாா். இந்நிலையில், இரவு வீட்டில் தூக்கிட்டு மனோஜ்குமாா் தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து தந்தை அளித்த புகாரின் பேரில் கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].