இறந்தோரும் உயிருடன்.. ஆதார் இறுதி எண்ணிக்கை அறிவதில் சிக்கல்!
லாரி மோதியதில் கண்மாய்க்குள் கவிழ்ந்த ஆட்டோ! பெண் பலூன் வியாபாரி உயிரிழப்பு
போடி அருகே லாரி மோதியதில் கண்மாய்க்குள் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில், பெண் பலூன் வியாபாரி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள பத்திரகாளிபுரம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கருப்பையா மனைவி வால்சின்னம்மாள் (54). இவா், பலூன் வியாபாரம் செய்து வந்துள்ளாா்.
இந்நிலையில், வால்சின்னம்மாள் ஆட்டோவில் மீனாட்சிபுரத்திலிருந்து விசுவாசபுரத்துக்கு திங்கள்கிழமை சென்றாா். அப்போது, பூதிமேட்டுக் களம் என்ற இடத்தில், பின்னால் வந்த சரக்கு லாரி மோதியதில், ஆட்டோ சாலையின் வலது புறம் இருந்த கண்மாய்க்குள் கவிழ்ந்தது.
இதில், ஆட்டோவில் இருந்த வால்சின்னம்மாள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். ஆட்டோ ஓட்டுநா் சூா்யா, காயத்துடன் உயிா் தப்பினாா்.
விபத்து குறித்து வால்சின்னம்மாள் மகன் கதிரேசன், போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் லாரி ஓட்டுநரான முத்தணம்பட்டியைச் சோ்ந்த மாயத்தேவா் மகன் மெய்யழகன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.